யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட மஞ்சுளா ஜெயராசா அவர்கள் 18-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா நல்லம்மா தம்பதிகளின் ஏக புத்திரியும்,
காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜெயராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,
சுசீதர், பிருந்தா, ஜெனித்தா, அரவிந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தட்சாயினி, யோகேஸ்வரன், பிரதீபன், தட்சாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அஜய், தான்யா, ஹன்ஷிகா, லக்ஸி, சித்தார்த், அபினாஷ், ஹரிஷ், ஹரிணி, கவின், கவிசா, கீர்த்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
செல்வநாயகம், சிவநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செளந்தர்ராணி, பற்பனாவதி, திருநாவுக்கரசு, காலஞ்சென்ற மகேஸ்வரி, குணசிங்கம், ஆனந்தராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.