யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heidelberg, Wilhelmsfeld ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ரஞ்சனா மன்மதராஜன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் மறைந்து
ஓராண்டு ஓடி மறைந்தாலும்
உங்கள் ஒளிமுகத்தை முன்நிறுத்தி
என்றும் உங்கள் மீளா
நினைவுகளுடனே வாழுகின்றோம்.
பாசமும் பரிவும் தந்து
பார்த்துப் பார்த்து வளர்த்தது
பசுமையான நினைவுகளாய் இருக்கிறதே
உதரத்துள் உயிர்தந்து
உதிரத்தைப் பகிர்ந்தளித்தீர்
உதட்டோரப் புன்னகையால் இன்முகம்
மலர்ந்திடுவீர்
எழுத முடியவில்லை,
இதயம் கனக்கின்றது
எம்மை விட்டு நீங்கள் நீங்கியதாய்
நாம் நினைப்பதில்லை அம்மா
நீங்கள் எம்மோடு இருப்பதாய்
கற்பனையில் கழிக்கின்றோம் தாயே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!