யாழ். நெடுந்தீவை பூர்வீகமாகவும், வேலணையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை நிரந்தர வதிவிடமாகவும், கனடா Montreal ஐ வாழ்விடமாகவும் கொண்டிருந்த பெரியதம்பி சிவக்கொழுந்து அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே !
உங்கள் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே..!
இல்லறக் கடமையெல்லாம்
இனிதே முடித்தீரென்று
தன்னடியில் அமைதிகொள்ள
இறைவன் அழைத்தானோ!
மீண்டுமொரு பிறப்பிருந்தால்
எங்களிடமே வந்திடுங்கள்!
ஈராண்டில் மட்டுமல்ல உயிருள்ள வரை
நாமென்றும் அஞ்சலிப்போம்
உங்கள் ஆத்மா சாந்திபெற
காவல் தெய்வமாய் எங்களோடு
என்றும் நீங்கள் இருப்பதாய் எண்ணி
உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்....
இனிய நல் ஆத்மா, நாளும் பூக்கொண்டு தொழுதிட்ட
வயலூர் முத்துமாரியம்மன் பாதங்களைச்
சென்றடைய பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி/ ஓம் சாந்தி/ஓம் சாந்தி
மனைவி, மக்கள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்