யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், தற்போது ஜேர்மனி Oberhausen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமலிங்கம் கனகாம்பிகை அவர்கள் 07-07-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான தங்கராஜா அருளம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பரமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
முரளிராஜ், காலஞ்சென்ற நிஜாந் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், ராஜலிங்கம் மற்றும் கமலாதேவி(ஜேர்மனி), வீரசிங்கம்(கனடா), சண்முகலிங்கம்(கனடா), தியாகலிங்கம்(ஜேர்மனி), கலாநிதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லிலாவதி, சாந்தி, காலஞ்சென்ற குணபாலச்சந்திரன், புனிதராணி, கிருஸ்ணா, உதயகுமாரன், காலஞ்சென்ற தர்மலிங்கம், குணேஸ்வரி, மங்கையற்கரசி, நவமணி, பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற கணேஸ், மனோன்மணி ஆகியோரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முத்துத்தம்பி, இராசம்மா ஆகியோரின் பெறாமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்