யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் கன்னாதிட்டி வீதியை வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்ணர் இராஜரட்ணம் அவர்கள் 06-07-2020 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணர் மீனாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பவளம் அவர்களின் அன்புக் கணவரும்,
மஞ்சுளா, கலாநிதி, தயாநிதி, ஸ்ரீதரன், காலஞ்சென்ற கிரிதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான குருசாமி, தம்பிராஜா, செல்லத்துரை, பொன்னையா, ராஜா, நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீஸ்கந்தராஜா, கிருபராஜ், சந்திரராஜன், தபோதாரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆத்விகா, ஆதிரா, தாமிரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-07-2020 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.