யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், நல்லூர், பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் கதிர்காமநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் ஒளி விளக்காய்
குவலயத்தே மிளிர்ந்தீர்கள்
அன்பு அப்பாவே
நீங்கள் எமைப் பிரிந்து
ஆண்டு இரண்டாகி விட்டது
கண்ணிற்கு இமைபோல
எமைக்காத்திருந்த தெய்வமே
கண்ணிமைக்கும் நேரத்தில்
எமைப்பிரிந்து சென்றீரோ
கனவிலும் நினைவிலும் நிதம்
நினைத்து வாடுகின்றோம்
தந்தை எனும் ஓர் சொல்லை
சொல்லிடவே நா துடிக்கிறதே
நீ இல்லை எனும் ஓர் உண்மை
இன்னும் எனக்கு புரியலையே....
ஈராண்டு போனது ஆனால் ஒரு நாள்
போனது போல் நாங்கள்
எல்லாம் துடிக்கின்றோம்!
தேடுகிறோம் உமை கனவுகளில்
என்றும் சுமந்தபடி..!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்: குடும்பத்தினர்