யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி தியாகராஜா அவர்கள் 12-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு இளைய மகளும், முத்தையா தையல்முத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முத்தையா தியாகராசா(புகையிரத நிலைய கணக்காளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
துளசி(லண்டன்), கலாஜினி(கொழும்பு), முரளி(அஜித்- சுவிஸ்), தயாளினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவகுமாரன்(சுவிஸ்) அவர்களின் அன்பு சிறியத் தாயாரும்,
ரவிராஜ்(லண்டன்) அவர்களின் ஆசை அம்மாவும்,
காலஞ்சென்ற யோகானந்தன், மதிவதனி(அகிலா), கதிர்ராஜா, பத்மசுந்தரி, காலஞ்சென்ற ஹேமா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், கணேஸ்பரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இராசம்மா அவர்களின் அன்புச் சகலியும்,
சாய் வைஸ்னவி ஐங்கரன், சாய் ஆனந், சாய் நிஷா, ஹரின், ஜவின், சாய்ரஞ்ஜனி, வித்தியா, சாய்தேவ், சைலஜா, யாதவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
மாறன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-07-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.