31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
திரு தம்பிமுத்து சீவரட்ணம்
Born 27/08/1936 - Death 15/07/2023 யாழ். ஏழாலை (Birth Place) மானிப்பாய், கனடா Toronto (Lived Place)யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிமுத்து சிவரட்ணம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், Aruthal.com ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அமரர் தம்பிமுத்து சிவரத்தினம் அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 12-08-2023 சனிக்கிழமை அன்று மு.ப 07.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்தியக்கிரியைகள் 14-08-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலும் நடைபெற இருப்பதனால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
மானிப்பாய்.