யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் சண்முகம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பின் தந்தையே
உங்களைப் பிரிந்து
ஐந்து ஆண்டுகள் சென்றதேனோ
எத்தனை காலங்கள் போனாலும்
ஆறவில்லை எம் துயரம்
அன்பிற்கும் பாசத்திற்கும் பண்பிற்கும்
உறைவிடமாய் விளங்கிய எங்கள் அப்பாவே
ஆயிரம் தான் உறவுகள் இருந்தென்ன
பலகோடி இன்பங்கள் இருந்தென்ன
உங்கள் உறவுக்கு நிகர் எமக்கு
இப்பாரினில் யார் தான்
நித்தமும் உங்களை நினைத்து
நீங்கள் காட்டிய நல்வழியில்
நீங்கா நினைவுகளுடன் வாழ்கிறோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!