யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் பொன்னுசாமி பழனிவேல் முருகதாஸ்(பிரபல தவில் வித்துவான், கலைஞான பாரதி, தமிழ் இசை செல்வன், தவில் இசை சுடர் ஒளி) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களின் முருகதாஸ் மங்களவாத்திய மன்னன்
ஈழத்தின் பழனிவேல் ஈன்றெடுத்த புதல்வன்
கங்காரு மண்ணில் ஒளிவிட்ட கலைஞன்
கண்ணாக தவில் அணைத்தார் வாழ்வில்
புன்முறுவல் புத்து நிற்கும் வதனம்
புதுத்தாளம் தொட்டு நிற்கும் விரல்கள்
கண்கவர உடை அணியும் பாங்கு
கவர்ந் திழுக்கும் கலைஞான திலகம்
உலகமெலாம் சென்று வந்த கலைஞன்
உயர்ஞான இசைக் குடும்ப மைந்தன்
தவி லோடு பலவறிந்த தாஸன்
தரமான லய ஞான மேதை
வதனி மனம் உறைகின்ற அழகன்
மணி மணியாய் பிள்ளைகளின் தந்தை
துணிவான செயல் ஆற்றும் தாஸன்
இனி இவன்போல் தவில்மேதை வாரார்
உங்கள் பிரிவால் வாடும் உங்கள் மனைவி, பிள்ளைகள்
மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் சகோதர சகோதரிகள்,
உற்றார் , உறவினர்கள்..