யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தேவானந்தம் லூயிஸ் அருளானந்தம் அவர்கள் 20-07-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், அருளப்பு அருளானந்தம் புஸ்பரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வனும், கனகசபை திருநாவுக்கரசு செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குமுதினி அவர்களின் அன்புக் கணவரும்,
லனுர்தன், லதுர்ஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வானந்தம்(இலங்கை), கிறிஸ் ரீனா புஸ்பம்(கனடா), அன்னமலர்(இலங்கை), அன்ரன்(இலங்கை), பீற்றர் போல் புஸ்பானந்தம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றொபோட், ஸ்ரனிஸ்லோஸ், புவனேந்திரன், பிரபாகரன், காலஞ்சென்ற பிரதீபன், மனோரஞ்சன், நரேஷ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.