யாழ். கரம்பொன் மேற்கு காவலூரைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை பத்மநாதன் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் குல விளக்கே
ஆண்டு பன்னிரண்டு போனாலும்
உம் நினைவுகள் எம்மை விட்டு அகலவில்லை அப்பா!
வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும்
உம் நினைவால் வாடுகிறோம் அப்பா!
உம் இழப்பை ஈடு செய்யமுடியாமல் தவிக்கின்றோம்
மீண்டும் பிறந்து வருவீரா எம் அன்பு அப்பாவே!
உம் இழப்பால் எம் விழியோரம் கசியும்
கண்ணீர் துளிகளை உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம்..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்