யாழ். அச்சுவேலி தெற்கு திருப்பதி இல்லத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த விமலா பரிபூரணானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று போனாலும்!
அழியாது நம் துயரம்
மறையாது உங்கள் நினைவு!
எம்மை ஆறாத் துயரத்தில்விட்டு போனதேனோ!
புன்னகை புரியும் உங்கள் முகம்
எமக்கு தினமும் தெரிகிறது ஆனாலும்
அது உண்மை இல்லை என்று நினைத்தபின்
எம் மனம் கலங்குகிறது...
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு அன்னையாய் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம் தாயே!!
உங்கள் வாழ்வுதனை வர்ணிக்க
வார்த்தைகள் தேடியே தவிக்கின்றோம் தாயே..
இன்று நீங்கள் இல்லாத இவ்வுலகில் வாழ்வதற்கு
என்ன பாவம் செய்தோம் தாயே..
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!