யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட பேராயிரம் இராசலட்சுமி அவர்கள் 05-09-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஏரம்பு சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஏரம்பு பேராயிரம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான குமரகுரு, ஐயாத்துரை, அன்னலட்சுமி, வசந்தலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ஏகாம்பிகை, இரட்ணலிங்கம் மற்றும் சரவணபவன், நடனசண்முகம், இராசலோசனி, செல்வமணி, காலஞ்சென்றவர்களான குணரட்ணம், இராசையா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
இராஜராஜன், குகப்பிரியா, ஸ்ரீ துவாரக பால கிருஷ்ணா(துவாரகன்), காலஞ்சென்ற கரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
துஷ்யந்தி, இளங்கோ, கமலினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும், ஆருஷன் - விசாகன், அகநிலா, சிவரக்ஷா, நிலாகரன், அங்கயன், தெய்வீகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2023 வியாழக்கிழமை அன்று 33, சிவப்பிரகாசம் வீதி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
tamiltribute.com ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.