யாழ். கரணவாய் கிழக்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பாலச்சந்திரன் அவர்கள் 04-09-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா(ஓய்வுநிலை அதிபர்) சிவகாமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற பண்டிதர் பொன் கணேசன்(கல்வி அதிகாரி), காலஞ்சென்ற பொன்னையா மகாதேவன்(பிரதம எழுதுவினைஞர்), பொன்னையா சோமசுந்தரம்(கால்நடை வைத்தியர் – லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நந்தினி, பவானந்தன்(இலண்டன்), நளினி(கொழும்பு), நளாயினி(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கௌரி(பாரிஸ்), சௌந்தரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சின்னையாவும், ரவீந்திரன்(ஓய்வுபெற்ற அதிபர்), குமரநேசன்(பொறியியலாளர், கொழும்பு), வேலாயுதம்பிள்ளை(நெதர்லாந்து), அம்பாலிகா(இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஐங்கரன், பிரவீணா, நிலோஷன், கன்யா, அரோன், அக்ஷரா, வேணுகானன், நித்திலா, வினுஷன், நிதுஷன், கார்த்திகா, தர்ஷிகா, சோபிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற கே சி மகாதேவன்(ஓய்வுநிலை உதவி ஆணையாளர்), மகேஸ்வரி(பூபதி), காலஞ்சென்றவர்களான மகாலிங்கம்(ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர்), சுந்தரலிங்கம்(பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி-ஒட்டிசுட்டான்), புவனேஸ்வரி மற்றும் லிங்கவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவக்குமார்(கனடா), காலஞ்சென்ற ஜெயக்குமார், குமாரி(கனடா), சாந்தி(கனடா), பாலகுமார்(கனடா), மதன்ராஜ்(இலண்டன்), மேனகா (இலண்டன்), மேகலா(இலண்டன்), நீரஜா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-09-2023 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சோனப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்