யாழ். அரியாலை கதிரவேலு ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பு சுகன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புள்ள அப்பா
ஆண்டு ஒன்று உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உங்கள் அன்பு முகம்
நிழற்குடையாய் எம்மை நித்தமும் காத்தாய்
அன்போடும், பாசத்தோடும் அரவணைத்து
எம்மை நல்வழிகாட்டினாய்
உறுதியுடன் மண்ணில் வாழ வைத்து
எங்கள் அன்புத் தெய்வமே! அப்பா
என்று குரல் எழப்புகிறோம் ஆனால்...
பதில் இல்லையே!
பண்பையும் பாசத்தையும்
எம்முள் விதைத்து எமை விட்டு
இறைவனடி சென்றீர்களே
இன்னும் வாழ்ந்திருக்கலாம் அப்பா
நீங்கள் எங்களோடு
இறையருளோடும் உங்கள் ஆசிகளோடும்
எங்கள் வாழ்வின் கனவுகளும்
வளர்ச்சிகளும் நிஜமாகும்..
எம்மோடு நீங்கள் என்றென்றும்
கூடவே இருக்கின்றீர்கள் என்று
இப்பூவுலகில் உளம் தளராது பயணிக்கின்றோம்.
உங்களை ஒரு போதும் மறவாமல் வணங்குகின்றோம்
இறைவன்திருவடியில்
சாந்திபெற பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி...! ஓம் சாந்தி....! ஓம் சாந்தி....!!