யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 12ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், யாழ்ப்பாணம் றக்கா வீதி, கொழும்பு உம்பிச்சி பிளேஸ், இந்தியா சென்னை, கனடா Keswick ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேந்திரன் முத்துவேலு அவர்கள் 09-09-2023 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துவேலு சிவக்கொழுந்து தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், பொன்னம்பலம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதிதேவி(சின்ன பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,
யோககல்யாணி, நித்யகல்யாணி, ரஞ்சினி, சிவநேசன், உமாநந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நடேசலிங்கம், தயானந்தன், டிலாஷ், குகதர்ஷினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி மற்றும் மகேஸ்வரி, கோபாலபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், இரத்தினசபாபதி, திருஞானம், பாலசிங்கம், சபாஷ் சந்திரன் மற்றும் சரோஜினிதேவி, பத்மாசனிதேவி(பெரிய பேபி), பொன். சுந்தரலிங்கம், இளங்கோவன் ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான வர்ணமணி, மகேஸ்வரி, கனகரெத்தினம் மற்றும் ரஞ்சனா, கோசலை, சந்திரா, சாரதாதேவி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
ரஜீவ், கபிலன், தரண்யா, டிரா, டிரன்யா, ரியாலக்ஷ்மி ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
tamiltribute.com ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.