யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னி Seven Hillsஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மகேந்திரன் பூமணி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 30/09/2023
மறவா நினைவுகளை
மனதோடு தந்துவிட்டு,
இறையோடு சென்று இன்று
பத்து ஆண்டுகள்
வார்த்தைகளால் சொல்ல முடியாத
வலிகள் உங்கள் இழப்பு!
இருந்தபோதே எம்மைக்
காத்தகாவல் தெய்வமே இறந்தாலும்
எம்மை இறையாக்காப்பீரே!
ஆண்டுகள் எத்தனை கடந்தாலும்
எங்கள் ஆழ்மனங்களின் ஆணிவேர்
நீங்கள் எங்களுக்கான இலக்கணம் படைத்த
உங்களை பத்து அல்ல
பல நூறு ஆண்டுகள்
சென்றாலும் மறக்கமாட்டோம்
திருப்ப முடியாத காலத்தை
உங்கள் நினைவுகளுடனும்
நிழல்ப்படத்தினூடாகவும்
திரும்பிப்பார்க்கின்றோம்.
தகவல் : சக்திவேல்(மகன்-சிட்னி)