யாழ்ப்பாணம் நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், நல்லூர், திருநெல்வேலி, சண்டிலிப்பாய், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி இலகுநாதன் அவர்கள் 25-10-2023 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதன் நாகமுத்து தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் இலகுநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
மகேந்திரன்(White Horse Travel- கனடா), கோணேஸ்வரன்(கனடா), சுமணா(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
உதயகெளரி, வாசுகி, சீவராஜ்(ஜீவன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விதுஷன், கரிஷன், யனுஷா, அக்சயா, கெளசியன், ஆர்த்தி, அபிஷா, ஆதுஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான ஐயாத்தை, பாலசிங்கம், கந்தையா, சிவகுரு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான துரைராஜா, சோதிவேல், தங்கரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு tamiltribute.com ஊடாக கேட்டுக்கொள்கின்றோம்.