யாழ்ப்பாணம் கரவெட்டி நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி.இராசமணி நடராஜா அவர்கள் 28-12-2023 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இராசமாணிக்கம், சின்னம்மா கைலம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கந்தவனம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தவனம் நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜ் நடராஜா, இரஞ்சினி வேலுப்பிள்ளை ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மணி வேலுப்பிள்ளை, தமாரா இராஜேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராஜேஸ்வரி, காலஞ்சென்ற இராசதுரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அன்னம், சுப்ரமணியம், இரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான புஷ்பராணி, இராசதுரை, செல்லய்யா, கனகசபை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஹவீனா மற்றும் காலஞ்சென்ற மகிந்தன் ஆகியோரின் அருமைப்பாட்டியும்,
சுதேசன், சுபேந்திரன், சுபானந்தன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
ராகவன், உமாலினி, சுபோதினி ஆகியோரின் அன்பு பெரியமாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.