யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், திருமகள் வீதி, அரியாலை, கொழும்பு கொட்டாஞ்சேனை, சொய்சாபுர மற்றும் கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி சுப்பிரமணியம் அவர்கள் 27-06-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற திருமதி தங்கம்மா (லக்ஷ்மி) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பசுபதி, பார்வதி, கண்மணி, நாகம்மா மற்றும் கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற செல்வி திலகராணி ,திரு தயாபரன் (கண்ணன்- கனடா, உயர்தரம் 1991ம் அணி யாழ்.இந்துக் கல்லூரி, Bell Canada), கலாநிதி மகேஸ்வரன் (ஈசன்-கனடா, உயர்தரம் 1994ம் அணி யாழ்.இந்துக் கல்லூரி, மொரட்டுவ பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
புஷ்பலதா, மாதுமையாள் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அர்வின், அஷ்மிதா, டிலன், கவின், மொழி, ஷாரினி ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.