யாழ். மானிப்பாய் சங்குவேலியைப் பூர்வீகமாகவும், பிரித்தானியா liverpool ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரிஷானி சிவராஜ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
மீண்டும் நீ வருவாயா மகளே ரிஷானி ....!
முழு நிலவாய் ஒளி கொடுத்த
எங்கள் வான் நிலவே நீ எங்கே?
சிட்டாக சிறகடித்து வலம் வந்த
எம் கண்மணியே நீ எங்கே?
சிரித்த உன் அழகு வதனமும்
பேசிய உன் செல்லக் கதைகளும்
உறைந்து நிற்கின்றது- எங்கள்
உள்ளங்களில் அழியாத ஓவியமாக!
உன் சிரிப்பை நாம் ரசித்த போதெல்லாம்
தெரியவில்லை எம் மொத்தச் சிரிப்பையும்
நீ எடுத்துச் செல்வாய் என்று!
மொத்தமாக உன்னை
வாரிக் கொடுத்துவிட்டு
விழியோரம் எந் நாளும்
கண்ணீர் சுமக்கின்றோம்!
மனதை ஆழ்ந்த துயரில்
ஆக்கிபோனாய் - எம்
அன்புச் செல்வமே...உன்
நினைவுகளையும் எங்கள்
துயரங்களையும் கண்ணீரால் மாலையாக்கி
உனக்குச் சமர்ப்பிக்கின்றோம்.