யாழ். சாவகச்சேரி பெரியமாவடியைப் பிறப்பிடமாகவும், நெல்லியடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நகுலேஸ்வரன் யோகறஞ்சினி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் குலவிளக்காய்
ஒளியேற்றிய அம்மாவே!
பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்து
பாரினிலே எம்மை தவிக்கவிட்டது ஏனம்மா?
ஈராறு மாதங்கள் கடந்தும்
மீளவில்லை உங்கள் நினைவில்!
நீங்கள் இல்லை என்பதையே
உணர மறுக்கிறது எம் இதயம்!
உங்கள் மடியில் நாம்
இளைப்பாற வேண்டும் என்றோம்!
ஆனால் இறைவன் மடியில் இளைப்பாற
நீங்கள் சென்றதேனோ, ஆறவில்லை எம் இதயம்!
எங்கள் நினைவுகாலம் வரை
எங்கள் நினைவுகளில், அம்மா நீங்கள்தான்
எங்களுக்குத் தெரியும் – அங்கும்
உங்கள் நினைவுகளிலும், நாங்கள் தானென்று
ஓராண்டு சென்றாலும்
உங்கள் நினைவு என்றும் எங்களை நீங்காது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிராத்திக்கின்றோம்.
ஓம் சாந்தி..ஓம்சாந்தி..ஓம்சாந்தி
தகவல் : கணவர் பிள்ளைகள்