யாழ். பெரியவிளான் இளவாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த திரேசா சின்னராணி மரியதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனதம்மா உமைப்பிரிந்து
ஆனாலும் ஆறவில்லை எம் துயரம்!
பாசமழை பொழிந்து பரிவோடு
எமை வளர்த்தீர்கள்!
நல்வாழ்வு நாம் வாழ நாளும் எம்
வளர்ச்சிக்கு வழிகாட்டினீர்கள்!
நித்தம் உங்களை நினைக்கின்றோம்!
நீங்கள் எம்மோடு இருப்பது போல்
உணர்கின்றோம்!
மண்ணுலகை விட்டுச் சென்றாலும்
விண்ணுலகில் நல்வாழ்வு வாழ்வீர்கள் அம்மா......
எப்போது நீங்கள் வருவீர்கள் என்று
காத்திருக்கின்றோம் அம்மா
உங்களின் வரவுக்காய்......
ஆண்டொன்று அல்ல ஆயிரம் சென்றாலும்
அம்மாவின் அன்பு முகம்
அழியாமல் எங்கள் நெஞ்சினிலே
என்றும் நிலைத்திருக்கும்.
உங்களின் ஆத்மா சாந்திபெற
இறைவனை என்றும் பிரார்த்திக்கும்
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர்கள்