யாழ். அனலைதீவு 3ம் வட்டாரம் சந்தியா வளவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆருயிர்த்துணையே எங்கள் ஐயாவே
முத்துக்குள் பவளம் போல் வாழ்ந்த ஐயா
முழுமதியாய் வாழ்வு தந்த அன்பு துணைவா
தித்திக்கும் வாழ்வு தந்த தெவய்வத்தை
பறி கொடுத்து ஆண்டு வந்தும் ஆறமுடியவில்லை!!
எல்லையில்லா பாசம் கொண்ட மாமா
எல்லோர் உள்ளமதில் மெல்ல நடந்து
அரிய கடமைகள் அனைத்தையும் செய்தீர்
கட்டி முத்தம் தந்திடும் தாத்தா, அப்பப்பா
சொத்தாய் கிடைத்த உங்களை பறிகொடுத்துவிட்டோம்
உரிய கல்வியை உவப்புடன் ஊட்டி
அரிய கடமைகள் அனைத்தையும் செய்தீர்
எங்கள் உயர்வுக்காய் சிந்திய வியர்வையை
நினைந்திட எம்கண்கள் நீரால் நிறையுதே !!
ஐயா எங்களோடு வாழ்ந்த காலங்கள்
எமக்கு என்றும் இனிய பொற்காலங்கள்
உன்னதமாய் நாம் வாழ வழிகள் பலசெய்து
வாடிநின்ற போது வாரியணைத்து
துன்பங்கள் தனை விரட்டும் துணிவை
எம் உளங்களில் விதைத்து
நல்லவர்களாய் வாழவைத்த தெய்வமே
இனி எப்பிறப்பில் கண்டிடுவோம் ஐயாவே
ஆண்டுகள் நூறு கடந்தால் என்ன?
அடுத்தடுத்து நாம் வேறு பிறப்பெடுத்தால் என்ன?
அன்றும்! இன்றும்! என்றும்! மாறாது
உங்கள் அன்பும் பாசமும் எமதுயிர் உள்ளவரை
எங்கள் ஐயாவின் இனிய நல்ஆத்மா
அனலை ஐய்யனார் திருவடிகளில் அமைதி பெற்றிட
வேண்டி தொழுகின்றோம்
ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..!
தகவல் : அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்.