யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், மன்னார் புதுக்குளம், பிரித்தானியா, மன்னார் சின்னக்கடை ஆகிய இடங்களை வசிப்பிடமாக கொண்டிருந்த கார்த்திகேசு இராசு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்மை ஈன்றவளே எம் தெய்வமே
பாசமாய் வளர்த்தெடுத்தாய்
பரிவோடு எம்மை பாரமரித்தாய்
பார்போற்ற நாம் வாழ வழிவகுத்தாய்
பொறுமையின் சிகரமே - வருவாயா
மீண்டும் மறுபிறப்பெடுத்து
அன்பான சிரிப்பும்
அமுதூட்டும் கைகளும்
உங்கள் சிரிப்பூட்டும் கதைகளும்
இனி எங்கு காண்போம் அம்மா?
கடக்கும் காலங்களால்
மனதில் நிற்கும் நிஜங்கள்
உங்கள் நினைவுகளும் நிழல்களாகவே
எம்மனதில் எழுந்தாடுகின்றன அம்மா
ஓர் வருடம் ஓடி மறைந்துவிட
வாடி நிற்கின்றோம்
உங்கள் வசந்த முகத்தை காணாமல்!
ஆண்டுகள் ஓடிப்போனதே
வாசல் பார்த்து கண்கள் உங்களை தேடுதே
உங்கள் புன்னகையால் - நீங்கள்
சொல்லும் ஆயிரம் கதை கேட்க
காத்துக் கிடக்கிறோம்
வருங்கள் அம்மா....
தகவல் : பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் கொப்பாட்டுப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்.