யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவபாக்கியம் திருநாவுக்கரசு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு நினைவலைகள் அம்மா நீங்கள் எம்மை விட்டுப்பிரிந்து
ஆண்டொன்று உருண்டோடி விட்டது
அம்மாவின் அன்புக்கு ஈடாக இவ்வுலகில் ஏதுமில்லை
உம்மைப் போல அரவணைக்க யாருமில்லையே
நீங்கள் ஈன்றெடுத்த பிள்ளைகள் நாம்
ஐவரும் வெவ்வேறு திசைகளில் நிர்க்கதியாகிவிட்டோம்
உங்கள் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் அறிவுரைகள்
இல்லாமல் தளர்ந்து போகின்றோம் அம்மா
ஆண்டவன் அழைப்புக்கு யாம் என்செய்வோம் அம்மா
வாழும் காலத்தில் உம்மைப் போல்
இரக்கம், கருணை, பாசம், அன்பு, ஈகை, விரும்தோம்பல்
தெய்வபக்தியோடு நீர் காட்டிய மாதிரியைப்
பின்பற்றி நடப்போம் அம்மா
பாக்கியம் பெற்றெடுத்த புத்திரிகள்
பாரினில் பாக்கியமற்று போனோம் அம்மா
உங்கள் விருப்பப்படி ஐவரும் யாம்
உலகில் நல்ல விழுமியப் பண்போடு வாழ்வோம் அம்மா
அகமெல்லாம் நீங்கள் தான் நிலைத்திருக்கின்றீர்கள்
எம் ஒவ்வொருவருடனும் பயணித்துக் கொண்டிருக்கின்றீர்கள் அம்மா
மண்ணில் பிறப்புண்டேல் இறப்புண்டு என்ற நியதிக்கு
ஏற்ப எம்மை தேற்றுகின்றோம் அம்மா
வெவ்வேறு திசைகளில் யாம் வாழ்ந்தாலும்
ஐவரும் ஒற்றுமையாய் என்றும் உங்கள் ஆசைகளை
நிறைவேற்றுவோம் அம்மா
மனமெல்லாம் கனக்கின்றதே அம்மா
நெஞ்சமெல்லாம் ஏங்குகின்றதே அம்மா
உம் அன்பிற்காய் தவிக்கின்றதே..
என்றுமே எம் உள்ளங்களை விட்டகலாத
நினைவுக் கோலங்களுடன்
பாசமிக்க புத்திரிகள்
உங்கள் ஆன்மா என்றென்றும்
ஈடேறட்டும்