யாழ். பழைய பூங்காவீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த விசேந்தி அருளானந்தம்(முன்னாள் ஆசிரியர்- பலாலி ஆசிரியர் கலாசாலை) அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு ஓடிவிட்டது
இருக்கும் வரை ஒன்றும் தெரிவதில்லை
இறந்தவர் மீண்டும் வருவதில்லை
சிறு வயது முதல்
இந்த நிமிடம் வரை
ஞாபக அலைகள்
நெஞ்சுக்குள் முட்டி மோதி
வலிக்கிறது
விளங்கிக் கொண்டாலும்
வெளிப்படுத்தி கொள்ளவில்லை
தம்பி பெரியவன் என்று கூப்பிடுவது
இனி நான் கேட்கப் போவதில்லை
உங்கள் ஆத்மா இளைப்பாற
என் கண்ணீர் அஞ்சலிகள்