யாழ். சிறுப்பிட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி ஆச்சிப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கடவுளின் அற்புத படைப்பில்
தோன்றிய அழகிய இறைவியே
பாசம் என்ற பந்தத்தில்
உம்மை இழந்து பரிதவிக்கின்றோம்
உமதன்பு, உம் துடிப்பு என்றும்
எமக்காகவே இருக்கும்...
அன்பில் அன்னையாய்
அதிகாரத்தில் அரசியாய்
அழகில் தேவதையாய்
அறிவில் ஆசானாய்
கருணையில் கர்ணனாய்
புகழில் தலைசிறந்தவராய்
தானத்தில் தர்ம தேவதையாய்
இன்று வரை வலம் வந்தீர்......
எம்மை பொக்கிஷம் என நினைத்து
சிலை போல செதுக்கினீர்
இரவு பகலாய் உறக்கம்
துறந்து எம்மை உருவாக்கினீர்
அம்மம்மா.......
எத்தனை தடவை காயப்பட்டாலும்
உமதன்பு எம்மை ஆற்றிவிடும்
அம்மம்மா.......
எப்பொழுது கோபப்பட்டாலும்
உமது அன்பு உருக்கிவிடும்
அம்மம்மா......
உம்மை காணாத சோகம்
காலமெல்லாம் கண்ணீரில்
மூழ்கிவிடுகிறது
பண்புடன் பல வாழ்க்கை
தத்துவங்கள் புகட்டினீர்
போர் வீரனைப் போல் தைரியம்
கொடுப்பீர் அம்மம்மா...
உம் மடியில் இனி தூங்க
நாட்கள் தான் வருமோ?
கவலை கொண்டால் கட்டி
தழுவி முத்தமிடுவீர்
இன்னமும் உன்னையே தேடும்
எம் இருவிழிகள்......
எத்தனை கோடி தவமிருந்தாலும்
உம் தாயுள்ளம் இனி வருமோ?
ஒளிவீசும் நிலவைப் போல்
எம் வாழ்வின் விடிவிளக்கே
குல விளக்கே என தாரூயிர்
அம்மம்மா...
உன் வலிகளை மறந்து எம்
இன்பத்திற்காக இறுதி வரை
வாழ்ந்தவரே
உன் தியாகத்திற்கு இணை
ஏதும் உண்டோ...
உம் நிழலில் வாழ்ந்தோம் இனி
இறுதிவரை உம் நினைவில்
வாழ்வோம்
நன்றிகள் பலகோடி உனதன்பிற்கும்
உன் தாய்மைக்கும்
உன் அன்பிற்கு
அடிமையாகி விட்டோம்
அம்மம்மா...
உம் நினைவுகளோடு
என்றும் நாம் பயணிப்போம்.
இப் பூமியில் தோன்றிய அழகிய அன்னையே
எம் இதயதுடிப்பில் இணைந்திருக்கும்
ஓர் அற்புத உறவே
எனதாரூயிர் அம்மம்மா...
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
நாம் ஆறுதல் கொள்ளும் ஓர் அற்புத உறவே
கனவிலும் நினைவிலும் நீங்காத
உம் நினைவுகள்
உம் அக்கறையும், அரவணைப்பும்
என்றும் எம்மை விட்டு விலகாது
முந்தானையை தொட்டிலாக்கி
முத்தமிட்டு சீராட்டினீர்
தடுக்கி விழ்ந்தாலும் பலம் கொடுப்பீர்
நல் சிந்தனைகளையும்
எண்ணங்களையும் கொடுத்தீர்
வெளிநாட்டில் நாம் வாழ்ந்தாலும்
தாய் மொழியின் அருமையும்
தாய் நாட்டின் பெருமையையும்
உணர்த்தினீர்
அம்மம்மா...
கனவிலும் கலையாத உமது பாசம்
என்றும் எம்மோடு
உன் மடியிலும் மார்பிலும் என்று
சாய்வோம்?
கனத்த இதயத்தோடு உன் நினைவில்
கண்கள் கலங்குகின்றது
அம்மம்மா...
எம் வருகை தெரிந்து அருகில்
வந்து உணவளித்து
அக மகிழ்வாய்...
பூமி சுற்றுவது போல் எம்மை
சுற்றி உம் நினைவுகள்
உலகத்தில் இனி ஒரு
இதயம் உன்னைப் போல் வருமோ?
எம் இல்லத்தில் அன்பரசியாய்
எம் உறவுகளில் இனியவளாய்
என்றும் எம்மோடு இணைந்திருந்தீர்
அம்மம்மா...
இனி ஒரு காலம் வருமோ
உன் மடி சாய்ந்து நாம் தூங்க
காலமெல்லாம் கண்ணீர்
துளிகளோடு காத்திருக்க வைத்ததேனோ?
உம் உயிர்ப்பினில் நாம் வாழ்ந்தோம்
இப்பூமியில் எம் அன்புத் தேவதையை
எங்கு காண்போம்?
உலகின் உச்சம் நீ
உதிரம் உறையும் உறவும்
நீயல்லவா
ஆண்டொன்று ஆனாலும் எம் இதய
துடிப்பில் நீ இருப்பாய்
அம்மம்மா....
இறுதிவரை உம் இனிய
நினைவுகளோடு பயணிப்போம்
அம்மம்மா
மண்ணிலும் விண்ணிலும்
நீ சிறந்து விட்டாய்
ஆண்டொன்று ஆனாலும் உயிர் உள்ளவரை
உன் நினைவிருக்கும்
பல்லாயிரம் கோடி
நன்றிகள் கூறினாலும்
உன் தியாகத்திற்கு எதுவும் ஈடு
இணையாகாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவன்
பொற்பாதம் வேண்டி நிற்கின்றோம்
ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!!
என்றும் உம்மை பிரிந்து கண்ணீரில் ழுழ்கிவிட்ட
மகள் : பராசக்தி
மருமகன் : ஏ.எம். இராஜகோபால்
மகன் : காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்,
மருமகள் : சரோஜினிதேவி
பேரப்பிள்ளைகள் : சந்திரிக்கா பரமேஸ்வரன், இராஜேஸ்கண்ணன் பிரதீபா, ராதிகா பரமதாஸ், இராஜீவன் சர்மிளா, காலஞ்சென்றவர்களான சுரேஷ்குமார், துஸ்யந்தினி, துஜிதா மற்றும் துஸ்யந்தன் ஹம்சாயினி, கஜன் அனுஷ்கா.
பூட்டப்பிள்ளைகள்: ஜெயராம், ஜோதிராம், ஜெனராம், ஜெகராம், அஸ்மிதா, அநுஸ்கா, அபிசன், சாமுவேல், லியா, ஜோசாயா, ராகுல்கண்ணா, ரம்யா, சுரபி, சுருதி , அஸ்வின்.