யாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு ஏறாவூரை வதிவிடமாகவும் கொண்டிருந்த பத்மநாதன் ஞானமலர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் நிறைவிடமே அம்மா
கடந்த ஓராண்டு காலமதில்
உனை நினைக்காத நாள் இல்லை அம்மா
எம்மோடு பல காலம் இருப்பாய்
என எண்ணி இருந்தோம்
காலம் உன்னைப் பிரித்தது ஏனோ?
உலகில் ஆயிரம் உறவுகள்
இருந்தாலும் உமக்கிணையாக
இங்கு யாருமில்லை அம்மா!!
மறுபிறவி என்று இருந்தால்
உன் மடியில் மீணடும் தவழ்ந்திட
இறைவனை வேண்டுகின்றேன்
என்றும் அழியாத உன் பாசம்
எம்மை விட்டு அகலாது தாயே
உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிநிற்கின்றோம்.
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், மற்றும் உறவினர்கள்.