யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரலீலா சிவபாலசுந்தரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமதன்பு தாயே
பார் புகழ் போற்ற பக்குவமாய்
எமை வளர்த்த நேசத்தின் இருப்பிடமே
குடும்பத்தின் குலவிளக்கே
நீங்கள் எம்மை விட்டுப்
பிரிந்து ஆண்டொன்று ஆனதே!!
ஓராண்டு எமைப்பிரிந்து சென்றாலும்
ஒரு பொழுதும் எம் மனது
ஏற்றதில்லை உம் பிரிவை
உங்களின் நீங்க நினைவுகளை
என்றும் எம் மனதில் நினைத்திருப்போம் அம்மா
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டி நிற்கின்றோம்
கணவர், பிள்ளைகள், மருமக்கள், சகோதரங்கள்,
பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்கள்