யாழ். அச்சுவேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், இராசவீதி அச்சுவேலி, லண்டன் Manor Park ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் சீவரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று சென்றதோ
ஆறவில்லை எங்கள் துயரம்
எங்கே மறைந்தீர்கள் அம்மா..!
ஓராண்டு காலமதில்
உமைப் பிரிந்து நாம் இருந்தாலும்
உமை மறவாமல் நாம் இருக்கிறோமம்மா!!
ஒவ்வொரு கணமும் நினைத்து
நினைத்து அழுகின்றோம்
நீங்காத நினைவாய் நிகரற்ற நிழலாகி
எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்தி விட்டு
எங்கே சென்றீர்கள் அம்மா...
அம்மா என்றழைக்க இனி
நீங்கள் இல்லையே அடிமனதில்
வலி துடிக்க உயிரோடு வாழ்கின்றோம்!
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், மற்றும் உறவினர்கள்