யாழ். ஊர்காவற்துறை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அனற் மேரி திரேசா அல்வின் அவர்கள் 15-05-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லப்பறுனாந்து, வஸ்தியானாப்பிள்ளை(சிரோன்மணி) தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற அந்தோனிமுத்து, அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அல்வின் துரைசிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,டிக்சன், டீலியா, டெமிசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெனிடா, குயின்ரஸ், சர்மிளா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான றெஜினோல்ட், தேவசகாயம், ராஜசேகரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மலர், சேவியர், ராணி, றோஸ்மலர் மற்றும் கொலின், ஜேசுதாசன், செல்லமணி, பிறேமலா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
வனசா, யோசுவா, சங்கீத், கவீந்த், காவியா, நித்தியா, டிவ்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை மற்றும் நல்லடக்கம் கோவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு அமைவாக முன்பதிவுடன் மட்டும் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.