யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மதன் மகாலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கனிவான உன் பேச்சும்
பண்பான உன் செயலும்
மறக்குமோ என் நெஞ்சை விட்டு
நல்ல மனாளனாய் எல்லாவும் செய்தாயே
இப்படி பாதியில் என்னை பரிதவிக்க
விட்டு செல்லவா?
உன் பிரிவால் துடிக்கும்
உன்னை நினைத்து நித்தம்
கண்ணீர் வடிக்கும்
உம் பிள்ளைகளுக்கு நான்
என் சொல்வேன் உம் பிரிவால்
வாடுகின்றோம் தேற்றுவாரின்றி
உன்னோடு நாமிருந்த காலத்தை
எண்ணி எண்ணி ஏங்குகிறோம்
மீண்டும் அது வராதோ என்று?
மறைந்து விடுவாய் என்று தான்
என்றும் மறக்காத அளவு அன்பை
காட்டிச்சென்றாயா நீ?
பாசமுள்ள மகனாய்,
பண்புள்ள கணவனாய்,
நேசமுள்ள அப்பாவாய்,
நல்ல சகோதரனாய், உற்ற தோழனாய்
ஊர் போற்ற இருந்தாயே!!!
ஆண்டுகள் எத்தனை போனாலும்
என்றும் நீங்காத நினைவுகளுடன்
எம் நெஞ்சில் நீ என்றும்
நீங்காத சுடராய் வாழ்வீர்
கண்ணீர் நிறைந்த வலியோடும்
கனத்த மனத்தோடும் உங்களுக்கு
நாம் அஞ்சலி செலுத்துகிறோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகிறோம்
உங்கள் பிரிவால் துயருறும்
அம்மா, சகோதரங்கள், மனைவி, பிள்ளைகள்,
மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள்.