யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், புத்தூர், கோப்பாய், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சதாசிவம் லோகேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்போடு அரவணைப்பை
அள்ளி எமக்களித்து விட்டு
அமைதியாய் நீங்கள் உறங்கி
ஆண்டொன்று ஆனதப்பா...
உம்மிடத்தை நிரப்பிடவே
உமக்கிணையாய் இங்கு
யாருமில்லை அப்பா..
உங்கள் நினைவுகள்
என்றும் எம்மைவிட்டுப் போகாது
காலமெல்லாம் உங்கள் நினைவுகளை
சுமந்து நிற்போம் அப்பா....
என்றும் உம் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்!