யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், வவுனியா குருமன்காட்டை வதிவிடமாகவும் கொண்ட யோகேஸ்வரிதேவி துரைராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
இன்றும், என்றும் எமது மனம்
உங்களை தேடிக்கொண்டேதான்
இருக்கும்
உங்களை நினைக்கும் போதெல்லாம்
உங்கள் நினைவுத் துளிகள்
விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதம்மா!!!
உங்கள் நினைவுகள் என்றும்
எங்களோடு வாழும்!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் மரண செய்தி கேள்வியுற்று எமக்கு பல்வேறு ஊடகங்களின் மூலம் ஆறுதல் கூறியவர்களுக்கும் எமக்கு பல்வேறு வழிகளில் உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.