யாழ் நரந்தனை பிறப்பிடமாகவும் மீரிகம இலங்கை, Markham கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் பூமணி முத்தையா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம்.
அன்பையும் அறிவையும் தந்து
எங்களை வளர்த்த அன்பு அம்மா
இந்த அவனியிலே எமை தனியே
தவிக்க விட்டு அமைதியாய் சென்றதேனோ?
இன்றும், என்றும் எமது மனம்
உங்களை தேடிக்கொண்டேதான்
இருக்கும் அம்மா
உங்களை நினைக்கும் போதெல்லாம்
உங்கள் நினைவுத் துளிகள்
விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதம்மா!!!
ஆண்டு ஒன்றானாலும்
உங்கள் நினைவுகள் என்றும்
எங்களோடு வாழும்!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.