யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம் ஆஸ்பத்தரி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கண்ணையா செல்வகுமார் அவர்கள் 18-08-2021 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கண்ணையா சீதேவி தம்பதிகளின் அன்பு மகனும், கைலாயபிள்ளை கலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராதிகா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அவீன், ஆரியன், அயானா, அமாயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவகுமாரி(ஜீவா- சுவிஸ்), உதயகுமார்(செட்டி- ஜேர்மனி), விஜயகுமார்(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
நடேசமூர்த்தி, சுதர்சினி, விஜயஸ்ரீ, தர்சனா, தர்சன் ஆகியோரின் அருமை மைத்துனரும்,
ஆதவன் அவர்களின் பாசமிகு சகலனும்,
கௌரி, பாலச்சந்திரன், ராமச்சந்திரன், இந்திராணி(ஜேர்மனி Berlin), விமலச்சந்திரன், ரவிச்சந்திரன், ஜெயராணி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
கிசோ, நித்யா, தினேஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரிஷி, ஜனனி, சந்தோஷ், ஜசிதா, சஜந், விதுனா, அஸ்ரன், ஏடன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.