யாழ். அளவெட்டி மேற்கு கும்பழாவளையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் நாகேஸ்வரி அவர்கள் 25-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, கண்ணகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிதம்பரி, கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற விஸ்வலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவமலர், சத்தியமலர், சிறிகாந்தராசா(பிரான்ஸ்), சாந்தமலர், யோகமலர்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாலசுப்பிரமணியம், யோகலிங்கம், அன்பரசி(பிரான்ஸ்), மகேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவபாக்கியம் அவர்களின் பாசமிகு சகோதரியும்,
சுஜீபன் தர்சினி(பிரான்ஸ்), ரஜீபன் ருக்ஷா(பிரான்ஸ்), கஜனியா பிரதீப், வஜீபன், மயூராஜ் செல்வமலர், கிசோபா, அபிரா, கயிறா, பிரணவன்(பிரான்ஸ்), லக்ஷ்ன், ஜாதவன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
லியானா, மித்ரா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.