யாழ்ப்பாணம் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா யூலியன் ரெறன்ஸ் அவர்கள் 10-09-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, எலிசபெத் தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
மரியநாயகம் செல்லையா, காலஞ்சென்ற மேர்சி லீசியா(ரதி) தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், திரு. திருமதி நவரட்ணராஜா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெசிந்தா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜஸ்வந்(மெசி), ஜஸ்வந்தி(லீசியா) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
காலஞ்சென்ற அன்ரன், அகஸ்ரின், தர்மசீலன், மனோகரசீலன், காலஞ்சென்ற அனஸ்ரின், அல்வினஸ், றதினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
திருச்செல்வம்(திரு), கீதா, ஜெயசீலி, ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெயா(பிரான்ஸ்), காலஞ்சென்ற தவராசா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.