யாழ். வடமராட்சி வதிரியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட வீரகத்தி வேலும்மயிலும் அவர்கள் 15-09-2021 புதன்கிழமை அன்று Toronto வில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி தெய்வானை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி வேலும்மயிலும் அவர்களின் அன்புக் கணவரும்,
மயில்வர்ணதேவி, சிவதாஸ், சரோஜா, சிவச்செல்வம், தயாநிதி, சுதர்ஷினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பார்த்தீபன், தமயந்தி, சத்தியசீலன், சிவகுமார், தயான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, ஆறுமுகம், செல்லத்துரை, மாணிக்கம், இலட்சுமிப்பிள்ளை, இரத்தினம், சோமசுந்தரம், கிருஷ்ணபிள்ளை மற்றும் ஐயாதுரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, செல்லமுத்து, முருகுப்பிள்ளை, நாகரத்தினம், சரஸ்வதி, செல்லம்மா மற்றும் புவனேஸ்வரி, காலஞ்சென்ற பரம்சோதி, செல்வச்சோதி, இராஜேஸ்வரி, யோகேஸ்வரி, சோதிமலர், கமலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கமலேஸ்வரி, சாந்தநாயகி, சுப்பிரமணியம், மனோகரன், காலஞ்சென்ற செல்வச்சோதி, சுகுமார் ஆகியோரின் அன்புச் சகலனும்,
டினேஸ், சுருதிசாய், சாய்சயன், சாஜினி, ஜனனி, சாமினி, வர்ஷினி, ஆரணி, சாளினி, அஸ்வினி, அஸ்வின், ஈகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் 19/09/2021 அன்று Highland Hills Funeral Home and Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) இல் காலை 10.30 மணிக்கு நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.