யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை கணேசமூர்த்தி அவர்கள் 22-09-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற முருகேசு, சிவயோகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
நிறோஜா, நிஷாந், நிரேஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஈஸ்வரன், றீஷா அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், ஆனந்தமூத்தி, துரைராசா, கனகரத்தினம், சுந்தரலிங்கம் மற்றும் தணிகாசலம், சோமசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வள்ளிநாயகி, பொன்னம்மா, நாகலட்சுமி, பத்தினிதேவி, திலகவதி, குணவதி, கண்ணம்மா, கணேசன்- சிவபாக்கியம், சிவலோகநாதன்- கலைமகள், துரைசாமி- கிருஸ்ணவேணி, அன்னலட்சுமி- பசுபதிப்பிள்ளை, ஞானம்- குலேந்திரன், நவநீதம்- சிவலிங்கம், தனலட்சுமி- திருஞானசம்பந்தர் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கியானோ அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.