யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு Anderson Flats, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு நடராஜா அவர்கள் 06-10-2021 புதன்கிழமை அன்று மேல் மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி திருவடி நிழலில் சரணடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு சிவபாக்கியம் தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்தானலக்ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
உமாதேவி(உமா), கதிர்காமநாதன்(நாதன்) ஆகியோரின் அருமைத் தந்தையும்,
நவதாசன், சத்தியாம்பிகை(பாமா) ஆகியோரின் அன்பு மாமாவும்,
அரவிந்தன், பவித்திரன், கோகுலன், வாசுகி ஆகியோரின் ஆசைப் பேரனும்,
காலஞ்சென்ற சற்குணம், பத்மநாதன்(நீர்வேலி), காலஞ்சென்றவர்களான காங்கேசன், தணிகாசலம் மற்றும் சுசிலாதேவி(ஜேர்மனி), காலஞ்சென்ற மகாதேவன், தர்மராணி(மாவிட்டபுரம்) ஆகியோரின் அருமை அண்ணாவும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம், மங்களேஸ்வரி மற்றும் தேவகி(கனடா), காலஞ்சென்ற புவனேஸ்வரி, புண்ணியமூர்த்தி(ஜேர்மனி), சந்திரமலர்(கனடா), காலஞ்சென்ற சுவாமிநாதன், ஜெகதாம்பிகை(மலேசியா), சாவித்திரி(ஜேர்மனி), செந்தில்மணி(வவுனியா) ஆகியோரின் அருமை மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.