மலேசியா Seremban ஐப் பிறப்பிடமாகவும், யாழ். புலோலி வடமேற்கு மருதடி பருத்தித்துறை, பிரித்தானியா லண்டன், அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வெற்றிவேலு கதிரவேற்பிள்ளை அவர்கள் 17-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிட்னியில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு சிவபாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,
சத்தியபாமா, ருக்குமணி, காலஞ்சென்றவர்களான நடராஜா, சாவித்திரி, விசாலாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுபத்திராதேவி, காலஞ்சென்றவர்களான கந்தையா, சங்கரப்பிள்ளை, கந்தசாமி, சிதம்பரநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
NSW மாநில கட்டுப்பாடுகளுக்கு இணங்க, இரண்டு தடவையும் கோவிட் தடுப்பூசிகள் பெற்றுக் கொண்டவர்கள் மட்டுமே இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.