யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Waltrop ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணம்மா சோமசுந்தரம் அவர்கள் 01-11-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மார்கண்டு மாரிமுத்து தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சோமசுந்தரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
குமுதினி, கஜீதன், சுகப்பிரியா, பாமினி, கதீப், கஜந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிரதீபன்(பவா), வினோபா, திலக், சுபிந்திரன்(சுபி), தர்சினா, சுதன்யா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கனகலிங்கம்(கனடா), காலஞ்சென்ற பஞ்சலிங்கம்(நெதர்லாந்து), பவானி(சுவிஸ்), சாந்தலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நாகலட்சுமி, கேதாரகெளரி, மகாதேவா, சிவானி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், ஆனந்தமூர்த்தி, துரைராசா, கனகரத்தினம், சுந்தரலிங்கம் மற்றும் தணிகாசலம்(கனடா), காலஞ்சென்ற கணேசமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற வள்ளிநாயகி, பொன்னம்மா(கனடா), நாகலட்சுமி(கனடா), பத்தினிதேவி(இலங்கை), திலகவதி(இலங்கை), குணவதி(கனடா), கமலாதேவி(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
சுஜந்தா, தக்ஷயன், ஜெயதாப், திஷாதா, ஓவியா, திஷான், சுஜீத்தன், அதிரா, நதியா, நெய்ஜான், காலஞ்சென்ற சுஜீத்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.