யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hassloch ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிறிஸ்ரியான் மனுவேல்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு நினைவு...!
எங்கள் அன்புத் தந்தையே!
ஓராண்டு எண்ணுவதற்குள்
காற்றாய் கரைந்து விட்டது
உங்கள் அன்பை தோற்கடிக்க
மற்றொரு அன்பை உலகில்
யாரும் எமக்கு தரப்போவதில்லை
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
புன்னகை பூக்கும் பூ முகம்
பூவுலகுக்கே உதவும் உன் உயரிய குணம்
உண்மையை பேசும் உத்தமனே!
இன்று பிரிவு என்னும் துயரால்
ஓராண்டு ஓடி மறைந்தாலும்
எம் உள்ளங்களில் என்றும் நீங்காமல்
நிலைத்து வாழ்வீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..