யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா West Ryde New South Wales ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி திருநாவுக்கரசு அவர்கள் 13-11-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவக்கொழுந்து, விசாலாட்சி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மனைவியும்,
பாமினி(அகில்), மதனி(மேகலை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யோகேஸ்வரன், கிரிதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ராகுலன், மாயா, ஜேய்குலன், மரியா, கோகுலன், நிரோசா, கவிதாஸ், கீரா, கவிமாறன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அரன், நிலா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.