யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வேந்திரா செல்லத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீ இல்லாத நாமும்
நிலா இல்லாத வானம்!
நம் வீட்டு சூரியன் அழுகிறது
துடைக்க நினைக்கும் விரல்கள் எரிகிறது
நீண்டதோர் உலகினில்
உங்களைப் பிரிந்ததாலே
நிம்மதியிழந்து தவிக்கின்றோமய்யா!
உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
ஓராண்டு என்ன ஓராயிரம்
வருடங்கள் ஆனாலும் உங்கள்
நினைவாய் வாழ்ந்திடுவோம் அப்பா!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!