யாழ். புங்குடுதீவு 08ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை சச்சிதானந்தன் அவர்கள் 17-11-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தர்மலிங்கம் இந்திராதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுதா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுஜினா அவர்களின் பாசமிகு தந்தையும்,
கலாவேணி(சுவிஸ்), சரோஜினிதேவி(சுவிஸ்), தற்பரானந்தன்(சுவிஸ்), தனலெட்சுமி(சுவிஸ்) வசந்தி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, உருத்திரமூர்த்தி மற்றும் திருவேணி(சுவிஸ்), தமிழ்வானன்(சுவிஸ்), குமாரவேல்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கவிதா(ஜேர்மனி), பிருந்தா(ஜேர்மனி), சஜிதா(யாழ்ப்பாணம்), ரஜிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆனந்தராஜா(ஜேர்மனி), ஜெயபிராகாஷ்(ஜேர்மனி), பிரதீபன்(இலங்கை), பிரசாந்த்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
சாஜன், சஜித், சஜிதா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
சிவதாசன், சிவரேமா, சிவதர்சினி, சிவரூபன், பிரவீன், நிலக்ஷன், தனோஜன், தபினா, தபேயா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆகாஷ், ஆருஜன், பிருத்திகா, அபிஷாந், அஸ்வின், லிதுஷன், அபினேஷ், திஷாந்த் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-11-2021 சனிக்கிழமை அன்று மு.ப 08.30 மணிமுதல் பி.ப 8.00 மணிவரை பொரளை ஜெயரட்ன மலர்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் 21-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 12.00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத் தொடர்ந்து பி.ப 4.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.