யாழ். பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட நிர்மலாதேவி ரவீந்திரன் அவர்கள் 16-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி மனோன்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், சுப்பிரமணியம் சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற ரவீந்திரன் சுப்பிரமணியம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
லாவண்யா, பிரசன்னா, நிர்மல் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நவநீதா, கஸ்தூரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஸ்ரீஸ்கந்தா(ஜேர்மனி), சியாமளா(சுவிஸ்), ஸ்ரீநிவாஸ்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுகந்தகுமாரி, சோமசேகர், சிவசக்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அனிசா, அனிசன், அய்வனா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.